தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கரோனா வைரஸுக்கு இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி: மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்த ஒப்புதல்

கரோனா வைரஸூக்கு முதல்முதலாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட 'கோவாக்சின்' தடுப்பூசியை சோதனைக்கு உட்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :30 ஜூன் 2020, 9:55 am

DIN

கரோனா வைரஸூக்கு முதல்முதலாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட 'கோவாக்சின்' என்ற தடுப்பூசி மருந்தை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது. 

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மறுபக்கம் அதற்கான தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து ஆய்வு செய்யும் பணிகளில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இந்தியாவில் முதல்முறையாக கரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து ஹைதராபாத்தைத்  தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம், 'கோவாக்சின்' என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

தொடர்ந்து, இதனை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் இரு கட்டங்களாக மனிதர்களிடம் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

உலக நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் முன்னணி நாடாகத் திகழும் இந்தியா, இந்த சோதனையிலும் வெற்றி பெறும் பட்சத்தில் கரோனாவை ஒழிப்பதில் முக்கியப் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.