மத்தியப் பிரதேசத்தில் சரக்கு ரயில்கள் மோதல்: 3 பேர் பலி
மத்தியப் பிரதேசத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதியதில் 3 பேர் பலியானார்கள்.


மத்தியப் பிரதேசத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் மோதியதில் 3 பேர் பலியானார்கள்.
மத்தியப் பிரதேசம், சிங்க்ராலியில் தேசிய அனல் மின் நிறுவனத்துக்கு நிலக்கரி ஏற்றிச் சென்ற ரயிலும், மற்றொரு ரயிலும் இன்று காலை நேருக்குநேர் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் அனுமதிக்கப்பட்டதே விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதியில் மீட்புபணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் விபத்து தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. அண்மையில் வெளியான ரயில்வே புள்ளிவிவரங்களில் 2019-இல் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...