கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

அஸ்ஸாமில் சிறுமியை பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் கைது

அஸ்ஸாம் மாநிலத்தில் 12 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்று மரத்தில் தொங்கவிட்ட சம்பவத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News image

கோப்புப் படம்

Updated On :2 மார்ச் 2020, 5:28 am

PTI


தேஸ்புர்: அஸ்ஸாம் மாநிலத்தில் 12 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்று மரத்தில் தொங்கவிட்ட சம்பவத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அஸ்ஸாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டம் சக்லா கிராமத்தில், 12 வயது சிறுமி சனிக்கிழமை காலை மரத்தில் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர் 10ம் வகுப்பு மாணவர்கள் 7 பேரை கைது செய்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை இரவு இந்த மாணவர்கள் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிட்டிருக்கலாம். அச்சிறுமியின் வீட்டுக்கு அருகே இருந்த மரத்தில் சிறுமியின் உடல் சனிக்கிழமை காலை தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் உண்மை நிலை தெரிய வரும் என்று மூத்த காவல்துறை அதிகாரி கூறுகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.