சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேற மோடி முடிவு? ராகுல் கூறியிருக்கும் பதில் இதோ
சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டில் இருந்து வெளியேற நினைப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.


புது தில்லி: சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டில் இருந்து வெளியேற நினைப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகிய சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறலாம் என்று இந்த ஞாயிறன்று ஒரு எண்ணம் தோன்றியது என்று பதிவிட்டிருந்தார்.

இதனை வேண்டாம் என்று மறுத்தும், ஆதரித்தும் ஏராளமானோர் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கு பதில் அளித்துள்ளார்.
மோடியின் டிவிட்டர் பதிவை இணைத்து, வெறுப்புணர்வை கைவிடுங்கள், சமூக வலைத்தள கணக்குகளை அல்ல என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...