ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல்!

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
கேரள முதல்வர் பினராயி விஜயன்
Updated On :5 மார்ச் 2020, 8:01 am

DIN

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கேரளத்திலும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும், தொடர்ந்து மத்திய பாஜக அரசுக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் கருத்துகளைத்  தெரிவித்து வருகிறார் . 

இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயலாளர் ரஹீமுக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், முதல்வர் பினராயி விஜயனையும், இளைஞர் அணிச் செயலாளர் ரஹீமையும் வீடு புகுந்து வெட்டுவோம் என்று எழுதப்பட்டுள்ளது. 

இதையடுத்து அந்தக் கடிதம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்வருக்கு வந்துள்ள மிரட்டல் கடிதத்தினால் கேரள மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.