புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கேரளத்தில் காவல் நிலையங்களுக்கு தலைமையேற்கும் பெண் காவலர்கள்!

மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கேரளாவில் பெண் காவலர்களிடம் முக்கிய பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :7 மார்ச் 2020, 6:17 am

DIN

மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, கேரளாவில் பெண் காவலர்களிடம் முக்கிய பொறுப்பை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார். 

கேரள டிஜிபி லோகநாத் பெஹெரா சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

உலக மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அன்றைய தினம் பெண் காவலர்கள் தலைமையேற்க வேண்டும். மகளிர் தினத்தன்று அனைத்து காவல் நிலையங்களிலும் 'ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரிகள்'(SHO), தங்கள் காவல் நிலையங்களில் உள்ள பெண் காவலர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

உரிய பெண் காவலர்கள் இல்லாத காவல் நிலையங்களில் மூத்த அதிகாரிகள் பணியை மேற்கொள்வர். அதேபோன்று சர்வதேச மகளிர் தினத்தன்று முதல்வரின் வாகனப் பாதுகாப்பில் பெண்கள் கமாண்டோக்கள் பணியில் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார். 

இதற்கிடையே, சர்வதேச மகளிர் தினத்தின் ஒரு பகுதியாக மகளிர் தினத்தன்று ரயில் முழுவதும் பெண்களால் இயக்கப்படும் என்று கேரள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்தார்.

'மார்ச் 8 ஆம் தேதி காலை 10.15 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து புறப்படும் வெனாட் எக்ஸ்பிரஸ் பெண்களால் இயக்கப்படும். லோகோ பைலட், உதவி லோகோ பைலட், பாயிண்ட்ஸ்மேன், கேட் கீப்பர் மற்றும் டிராக் வுமன் அனைவரும் பெண்களாக இருப்பார்கள். டிக்கெட் முன்பதிவு அலுவலகம், தகவல் மையம், சிக்னல், வண்டி மற்றும் வேகன் இயக்கம் உள்ளிட்ட பொறுப்புகளிலும் பெண் அதிகாரிகளே இருப்பார்கள்.

இந்த ரயில் பயணத்தை தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. இது மாநிலத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம்' என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.