கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

செலவு செய்யப்படாமல் இருக்கும் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5,275 கோடியாம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகையில் ரூ.5,275 கோடி இதுவரை செலவு செய்யப்படாமல் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :11 மார்ச் 2020, 10:11 am

PTI


புது தில்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகையில் ரூ.5,275 கோடி இதுவரை செலவு செய்யப்படாமல் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்காக மத்திய அரசு ரூ.53,704.75 கோடியை ஒதுக்கியுள்ளது. இதில் மார்ச் 4ம் தேதி வரை ரூ.51,267.75 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மக்களவையில் இன்று மத்திய இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மார்ச் 4ம் தேதி நிலவரப்படி, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்கம் துறை வெளியிட்ட தகவலின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5,275.24 கோடி அளவுக்கு இன்னமும் செலவிடப்படாமல் உள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், ஆண்டு ஒன்றுக்கு தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்  மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் ரூ.5 கோடியை செலவிட்டு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.