சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக முதல்வர் வேட்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!
/

மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயில் மூடப்படுகிறது

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயில் மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2020, 11:27 am

PTI

கரோனா அச்சுறுத்தல் காரணமாக மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயில் மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், சித்திவிநாயகர் கோயில், அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை மூடப்படுவதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

நாட்டிலேயே திருப்பதிக்கு அடுத்தபடியாக பிரபலமான அதே சமயம் ரொக்கம், நவரத்தினம், தங்கம், வெள்ளி என அதிக காணிக்கை பெறும் கோயில்களில் ஒன்றாக திகழ்வது மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் என்பதும், இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.