சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு! நாதக முதல்வர் வேட்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல்!200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின்கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார்!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!
/

கொவைட் -19: நாக்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

கரோனா வைரஸ் பரவுவதை அடுத்து நாக்பூர் மற்றும் நாசிக்கில் 144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2020, 7:55 am

PTI

கரோனா வைரஸ் பரவுவதை அடுத்து நாக்பூர் மற்றும் நாசிக்கில் 144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகளில் இதுவரை 7000 பேர் வரை பலி வாங்கியுள்ளது. இந்தியாவில் மட்டும் 125 பேர் கரோனா வைரசுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவும், நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், மக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மற்றும் நாசிக்கில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் சர்வதேச அளவில் பரவி வருவதோடு, இந்தியாவிலும் பரவி வருகின்றது. இந்நிலையில் நாக்பூரில் கரோனா தொற்றுக்கு சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் இரண்டு பேர் கரோனா அறிகுறியுடன் நாசிக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இணை ஆணையர் ரவீந்திர கதம் தெரிவித்துள்ளார். 

பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கலாசார நிகழ்வுகள், விளையாட்டு, வர்த்தக கண்காட்சி, முகாம்கள், சுற்றுலா, பேரணிகள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.