நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கால்நடை பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே பகுதியில்.. மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அதே பகுதியில், பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2020, 5:48 pm IST


ஹைதராபாத்: கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அதே பகுதியில், பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சைபராபாத் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் செவெல்லா என்ற இடத்தில் உள்ள பாலத்துக்குக் கீழே நிர்வாணமாகக் கிடந்த பெண்ணின் உடலில், முகம் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்துக்கு மிக அருகில் தான் கடந்த நவம்பர் 2019ல் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

தங்கேடப்பள்ளி கிராமத்துக்கு வெளியே இருக்கும் அந்த பாலத்துக்குக் கீழே ஒரு பெண்ணின் உடல் இருப்பதை, அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பெண்ணின் உடலில் கை மூட்டு மற்றும் தொண்டைப் பகுதியில் கத்தியால் கீறிய காயங்கள் இருப்பதையும் கண்டறிந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கொலைகாரர்கள், நைலான் கயிறைக் கொண்டு அப்பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கலாம். வேறு இடத்தில் இந்த கொலையைச் செய்துவிட்டு, பெண்ணின் உடலை இங்கே வீசியிருப்பதாகவும், அடையாளம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே ஆடைகளை எடுத்துச் சென்றுள்ளனர். முகத்தையும் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.

உடற்கூறு சோதனைக்குப் பிறகே அப்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது குறித்து தெரிய வரும் என்றும் காவல்துறை கூறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையுண்ட பெண் 25 - 30 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் என்றும், சம்பவம் தொடர்பாக எந்த சாட்சியமும் அந்த இடத்தில் கிடைக்கவில்லை. பெண்ணின் உடலிலும் வேறு எந்த அடையாளங்களும் இல்லை. விசாரணை முடுக்கிவிடப்பட்டிருப்பதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.