கர்நாடகத்தில் இன்று மேலும் 2 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு
கர்நாடகத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.


கர்நாடகத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 143 நாடுகளைச் சோ்ந்த 1,70,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். 6,600-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவில் நேற்று வரை 115-போ் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 32 பேரும், கேரளத்தில் 23 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கரோனா தொற்றுக்கு இந்தியாவில் 2 போ் உயிரிழந்துவிட்டனா். 13 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். இந்நிலையில், கர்நாடகத்தில் இன்று மேலும் 2 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், கர்நாடகத்தில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து மைசூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...