கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 

News image
ஜம்மு காஷ்மீர்
Updated On :27 ஜனவரி 2024, 4:13 pm

DIN

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. 

கடந்த 2003-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவ அவ்வப்போது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. 

இந்தநிலையில் ஜம்மு-காஷ்மீரின் எல்லைப்பகுதியான பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள டெக்வார் பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. சிறிய ரக ஆயுதங்கள், பீரங்கி குண்டுகள் ஆகியவை கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. 

இதற்கு எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரா்கள் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. எனினும் இந்த சண்டையில் இந்திய தரப்புக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.