வழக்கத்துக்கு மாறாக நாடாளுமன்றம் திங்கள்கிழமை 2 மணிக்குக் கூடுகிறது
வழக்கத்துக்கு மாறாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை மதியம் 2 மணிக்கு கூடுகிறது.

நாடாளுமன்றம்

நாடாளுமன்றம்
புது தில்லி: வழக்கத்துக்கு மாறாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை மதியம் 2 மணிக்கு கூடுகிறது.
வழக்கமாக நாடாளுமன்ற அவைகள் முற்பகல் 11 மணிக்குக் கூடுவது வழக்கம். ஆனால், திங்கள்கிழமையன்று மதியம் 2 மணிக்குக் கூட உள்ளது.
இந்த முடிவு எடுக்கப்பட்டதற்குக் காரணம், கரோனா எதிரொலியால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாலும், விமானச் சேவையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாலும், தங்களது இடத்தில் இருந்து தலைநகர் தில்லிக்கு காலையில் வந்து சேருவது என்பது சிரமம் என்று தெரிவித்திருந்தனர்.
இந்தக் கோரிக்கை ஏற்று, வழக்கத்துக்கு மாறாக நாடாளுமன்றம் மதியம் 2 மணிக்குக் கூடும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். மேலும் இந்த நடைமுறை மார்ச் 23ம் தேதிக்கு மட்டுமே பொருந்தும் என்றும், அடுத்தத் திங்கள்கிழமை இது செயல்படுத்தப்படாது என்றும் திட்டவட்டமாக அறிவித்தார்.
இதே தகவலை மாநிலங்களவையிலும் அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...