டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நமது பொருளாதாரத்தைப் பாதுகாக்க ரிசர்வ் வங்கி மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது: பிரதமர் மோடி பாராட்டு

கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நமது பொருளாதாரத்தைப் பாதுகாக்க ரிசர்வ் வங்கி மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். 

News image
Updated On :27 மார்ச் 2020, 11:12 am

DIN

கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நமது பொருளாதாரத்தைப் பாதுகாக்க ரிசர்வ் வங்கி மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். 

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொருளாதார பாதிப்பு மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான 4 அம்ச திட்டங்களை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் அறிவித்தார். இதன்படி ரிவர்ஸ் ரெப்போ 4.9%-இல் இருந்து 4% ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் 5.5% ஆக இருந்த வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் 0.7% குறைக்கப்பட்டு 4.4% ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

மேலும் வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பதால் வீடு மற்றும் வாகனங்களுக்கான வட்டி விகிதம் குறையவும், வாடிக்கையாளர்களின் மாதந்திர தவணை குறைய வாய்ப்புள்ளது எனவும் மேலும் தொழில் நிறுவனங்கள், வங்கி வாடிக்கையாளர்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் அவர் கூறினார். இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைகளை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நமது பொருளாதாரத்தைப் பாதுகாக்க ரிசர்வ் வங்கி மிகப்பெரிய நடவடிக்கைகளை இன்று எடுத்துள்ளது. இந்த அறிவிப்புகள் பணப்புழக்கத்தை அதிகரிப்பதுடன், நிதி செலவைக் குறைக்கும். இது நடுத்தர வர்க்கம் மற்றும் தொழில்துறையினருக்கு உதவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.