கேரளத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
கேரளத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பலியான முதியவருக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்னையும் இருந்ததாக மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கேரளத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. மனிதர்கள் மூலமாக இந்த வைரஸ் வேகமாக பரவுவதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் வீடுகள் முடங்கி உள்ளனர்.
அந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை 1,251 பாதிக்கப்பட்டுள்ளனர். 32 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு 225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் கேரளம் உள்ளது. அங்கு 202 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறு வந்த முதியவர் இன்று காலை பலியானார். பலியான முதியவருக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்னையும் இருந்ததாக மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் இந்தியாவில் கரோனாவுக்கு பலியானர்களின் எண்ணிக்கை 33ஆகவும், கேரளத்தில் 2ஆகவும் உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...