அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

வரித்தொகை திரும்ப தரப்படும் என்ற தகவல் பொய்: வரித்துறை விளக்கம்

வருமான வரித்துறை திரும்ப செலுத்தப்படுவதாக வரும் இணையதள லிங்குகளை அழுத்த வேண்டாம் என்று வருமான வரித்துறை மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரித்துள்ளது.

News image
Updated On :4 மே 2020, 9:26 am


புது தில்லி: வருமான வரித்துறை திரும்ப செலுத்தப்படுவதாக வரும் இணையதள லிங்குகளை அழுத்த வேண்டாம் என்று வருமான வரித்துறை மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரித்துள்ளது.

ஊரடங்கு போன்ற மிக மோசமான காலக்கட்டத்தில் பொது மக்களின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, வருமான வரித்துறையினர், வரிப் பிடித்தத் தொகையை திரும்ப செலுத்துவதாகக் கூறி கடந்த சில நாட்களாக இணையத்தில் லிங்குகள் பகிரப்பட்டு வருகிறது.

அதன் மூலம் தனி நபரின் தகவல்கள் திருடப்படலாம் என்று வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வரித்துறை தெரிவித்திருப்பதாவது,

வருமான வரி செலுத்துவோர் கவனத்துக்கு..

ரி-ஃபண்ட் அளிக்கப்படும் என்று கூறி வரும் எந்த லிங்கையும் தொடர வேண்டாம். இந்த தகவல்கள் அனைத்தும் பொய், அதனை மத்திய நேரடி வரிகள் வாரியம் அனுப்பவில்லை, ஜிஎஸ்டி தொடர்பான எந்தவிதமான சந்தேகங்களுக்கும் gst.gov.in இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்று சுட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இது தொடர்பாக வருமான வரி செலுத்துவோருக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டிருந்தது.  வருமான வரித் தொகையை திரும்ப செலுத்துவதாகக் கூறி மின்னஞ்சலோ அல்லது தனிநபர் தகவல்களைக் கேட்டு மின்னஞ்சலோ அனுப்பப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.