அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

ஆக்ராவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 667 ஆக உயர்வு

ஆக்ராவில் கரோனா நோய்த் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 667 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில்,

News image
Updated On :7 மே 2020, 5:42 am

ஆக்ராவில் கரோனா நோய்த் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 667 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மத்தியச் சிறையில் உள்ள கைதி ஒருவருக்கு கரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்டதால் அங்குள்ள கைதிகள் அனைவருக்கும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

சுற்றுலா ஹாட்ஸ்பாட்டான ஆக்ராவில் மீட்பு விகிதம் 38 சதவீதமாக இருப்பதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 269 பேர் குணமாகியுள்ளனர். ஆனால் 42 ஹாட் ஸ்பாட்களில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 398 ஆக உயர்ந்துள்ளது.

ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், அவர் எஸ்.என் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சிறைச்சாலை நிர்வாகம் உடனடியாக அங்குள்ள கைதிகளைத் தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளது. 

சிக்கந்திரா பகுதியில் புதன்கிழமை பிற்பகல் பெண் காவலர் ஒருவர் கரோனாவுக்கு பலியானார். மேலும், பேருந்து நடத்துனர் டிபி சர்மா கடந்த 20 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தாஜ் நகரில் 18 பேர் நோய்த் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மாவட்ட தலைவர் பி.என்.சிங் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய்த்தொற்றுடன் பிற உடல்நலப் பிரச்னைகளும் இருப்பதாகக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.