நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு வரம்பில் மாற்றம்

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான  முதலீட்டு வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :13 மே 2020, 11:29 am

DIN

கரோனா நோய்த்தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து தேசத்தை மீட்கும் வகையில் பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதாரத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். 

அதன்படி, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான  முதலீட்டு வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள அனைத்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் இது மாற்றியமைக்கப்படுகிறது. இதற்கான சட்டத் திருத்தங்களும் விரைவில் மேற்கொள்ளப்படும். 

குறு தொழில் நிறுவனங்கள்

ரூ. 1 கோடிக்கு குறைவாக முதலீடு செய்யும் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் குறு தொழில் நிறுவனங்களாக வரையறுக்கப்படும். நிறுவனத்தின் வருமானம் ரூ. 5 கோடிக்கு குறைவாக இருக்க வேண்டும். 

சிறு நிறுவனங்கள்

ரூ. 10 கோடிக்கு குறைவாக முதலீடு செய்யும் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் சிறு தொழில் நிறுவனங்களாக வரையறுக்கப்படும். நிறுவனத்தின் வருமானம் ரூ. 50 கோடிக்கு குறைவாக இருக்க வேண்டும். 

நடுத்தர நிறுவனங்கள்

ரூ. 20 கோடிக்கு குறைவாக முதலீடு செய்யும் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் நடுத்தர தொழில் நிறுவனங்களாக வரையறுக்கப்படும். நிறுவனத்தின் வருமானம் ரூ. 100 கோடிக்கு குறைவாக இருக்க வேண்டும். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.