மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

கரோனா: ஒடிசா, ராஜஸ்தானில் பாதிப்பு நிலவரம்

கரோனா நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :14 மே 2020, 7:51 am

PTI

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று பரவி மக்களை உலுக்கி வருகின்றது. இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றால் இன்று பாதிக்கப்பட்டோர் விவரத்தை ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் மேலும் 66 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பதிவாகியுள்ளன.  அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 4,394 ஆக உள்ளதாக மாநில சுகாதாரத் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதில், 1,697 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,575 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. 

ஒடிசா

ஒடிசாவில் மேலும் 73 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள 71 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளதால், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு 611 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதில், 465 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதே நேரத்தில் 143 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். 3 பேர் பலியாகியுள்ளனர். ஒடிசாவில் இதுவரை 77,150 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.