பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

மார்க்சிஸ்டுக்கு திருவொற்றியூர் தொகுதி! அதிருப்தியில் திமுகவினர்!

மார்க்சிஸ்ட் கட்சிக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் பட்டியலில் திருவொற்றியூர் இல்லை என்ற நிலையில், இத்தொகுதியை திமுக தலைமை ஒதுக்கியிருப்பது ஏன் எனத் தெரியவில்லை என்று அதிருப்தி

News image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் - கோப்புப் படம்

Updated On :31 மார்ச் 2026, 6:36 am IST

திமுக கூட்டணியில் திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1967 முதல் இத்தொகுதியில் திமுக 7 முறை, அதிமுக 4 முறை, காங்கிரஸ், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. பெரும்பாலான தேர்தல்களில் இத்தொகுதியில் திமுக நேரடியாகப் போட்டியிட்டுள்ளது. அதன்படி, இந்த முறை திமுகதான் நேரடியாகக் களம் இறங்கும் என்ற நம்பிக்கையில் கட்சியினர் இருந்தனர்.

தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் போட்டியிட வாய்ப்பு கேட்டு திமுக தலைமையிடம் விருப்ப மனு அளித்திருந்தனர். மேலும், வேட்பாளர் நேர்காணலிலும் பங்கேற்றனர். தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிலர் பிரசார வாகனம்கூட தயார் செய்திருந்தனர்.

ஆனால், திருவொற்றியூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதேபோலதான் கடந்த 2001 தேர்தலின்போது, கடைசி நேரத்தில் திமுக கூட்டணி வேட்பாளராக குமரி அனந்தன் அறிவிக்கப்பட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.

அதோடு, மீனவர் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வேட்பாளர் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த நடைமுறையும் இந்தத் தேர்தலில் பின்பற்றப்படவில்லை.

மார்க்சிஸ்ட் கட்சிக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் பட்டியலில் திருவொற்றியூர் இல்லை என்ற நிலையில், இத்தொகுதியை திமுக தலைமை ஒதுக்கியிருப்பது ஏன் எனத் தெரியவில்லை என்று அக்கட்சியினர் அதிருப்தி தெரிவிக்கின்றனர். எப்படியிருந்தாலும் கட்சித் தலைமையின் முடிவையேற்று பணியாற்றுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.