ஒரு மாதத்திற்குப் பிறகு கோவாவில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று

ஒரு மாதத்திற்கும் மேலாக கரோனா தொற்று இல்லாத மாநிலமாக இருந்த கோவாவில் மீண்டும் புதிதாக 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
ஒரு மாதத்திற்குப் பிறகு கோவாவில் புதிதாக 7 பேருக்கு கரோனா தொற்று
Updated on
1 min read

பனாஜி: ஒரு மாதத்திற்கும் மேலாக கரோனா தொற்று இல்லாத மாநிலமாக இருந்த கோவாவில் மீண்டும் புதிதாக 7 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்த மாநிலச் சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். 

கரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து கோவா திரும்பியவர்கள் ஆவர். ஏழு பேரும் பாண்டாவில் உள்ள கரோனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரைத் தவிர, அவர்களுடன் வந்த ஓட்டுநர் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த டிரக் ஓட்டுநருக்கும் கரோனா உறுதியாகியுள்ளது. தொற்றுநோயைத் தொடர்ந்து கோவாவுக்கு வரும் அனைத்து நபர்களுக்கும் கட்டாயம் உடல் வெப்பநிலை மற்றும் உமிழ்நீர் பரிசோதனை செய்யப்படுகிறது. 

கோவாவில் புதிதாகப் பாதிக்கப்பட்ட ஏழு வழக்குகளும் இறக்குமதி செய்யப்பட்டவை என்றும், பரவுவதற்கான எந்த பயமும் இல்லை மக்கள் பயன்கொள்ளத் தேவையில்லை என்று அந்த நாட்டு முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

கோவாவில் முன்னதாக கரோனாவால் பாதிக்கப்பட்ட 7 பேரும் குணமடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து எந்த தொற்றும் கண்டறியப்படவில்லை. கரோனா இல்லாத நாடாக இருந்த கோவா, தற்போது புதிதாகப் பாதித்தோரால், பசுமை மண்டலம் என்ற  நிலையை இழந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com