வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஊரடங்கின் போது ரூ.74,300 கோடிக்கு விவசாயிகளிடம் இருந்து தானிய கொள்முதல்

ஊரடங்கு காலக்கட்டத்தின் போது அதாவது கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து ரூ.74,300 கோடி மதிப்பிலான தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :15 மே 2020, 10:53 am

DIN


புது தில்லி: ஊரடங்கு காலக்கட்டத்தின் போது அதாவது கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து ரூ.74,300 கோடி மதிப்பிலான தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 

பீமயோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6,400 கோடி நிலுவைத் தொகை கொடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டிருக்கும் போது விவசாயிகளிடம் இருந்து 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதம் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டிருக்கும் போது உற்பத்திப் பொருள்களுக்கான  குறைந்தபட்ச ஆதார விலையில் தானியங்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.74,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், இரண்டு கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 5000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் பணப்புழக்கம் ஏற்படுத்தப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.