மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

இந்தூரில் ஒரே நாளில் 79 பேருக்கு கரோனா: மொத்த பாதிப்பு 2,378, பலி 99

மத்தியப் பிரதேசத்தின், இந்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள

News image
Updated On :16 மே 2020, 5:59 am

PTI

மத்தியப் பிரதேசத்தின், இந்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2,378 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்தார்.

கரோனா நோய்த் தொற்றுக்கு 55 வயதான முதியவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது என்று அதிகாரி தெரிவித்தார். 

தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி (சி.எம்.எச்.ஓ) பிரவீன் ஜாடியா கூறுகையில், 

இந்தூரில் கடந்த 24 மணி நேரத்தில் 79 புதிய வழக்குகள் மற்றும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. கரோனா மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. மேலும், இந்தூர் மாவட்டத்தில் 1,100 க்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்று நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.