நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தற்சார்பு இந்தியா: நான்காம் கட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிர்மலா சீதாராமன்

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நான்காம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கிறார்.

News image
Updated On :16 மே 2020, 10:41 am

DIN


புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் நான்காம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கிறார்.

ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்களில் இன்று நான்காவது நாளாக முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிர்மலா சீதாராமன்.

புது தில்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவை பொருளாதார ரீதியாக தற்சார்பு இந்தியாவாக மாற்றுவது மிகவும் முக்கியம்.

தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் வகுத்திருக்கும் திட்டத்தின் அடிப்படை.  இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கைகளில் சீர்திருத்தங்கள் தேவை. நிறைய துறைகளில் வழிமுறைகள் எளிமையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்திய பொருளாதார ரீதியில் மிகப்பெரிய சீர்திருத்த நடவடிக்கையாகும். பிற நாடுகளுடன் போட்டியிட நாம் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.