புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சைக்கிளை எடுத்துச் செல்கிறேன்; மன்னித்து விடுங்கள்: நெஞ்சை உருக்கும் புலம்பெயர் தொழிலாளியின் கடிதம்

ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்புர் பகுதியில் இருந்து சைக்கிள் ஒன்றை திருடிச் சென்ற புலம்பெயர் தொழிலாளி, அதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிவைத்து விட்டுச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :16 மே 2020, 8:52 am

DIN


ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்புர் பகுதியில் இருந்து சைக்கிள் ஒன்றை திருடிச் சென்ற புலம்பெயர் தொழிலாளி, அதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதிவைத்து விட்டுச் சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி மொஹம்மது இக்பால், ராஜஸ்தான் மாநிலம் பரத்புரில் பணியாற்றி வந்தார்.

ஊரடங்கு உத்தரவால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களைப் போலவே இவரும் வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த ஊர் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

அப்போது, வழியில் ஒரு சைக்கிளை அவர் திருடிச் சென்றுள்ளார். போகும் வழியில் சைக்கிளை எடுத்துச் சென்றாலும், அந்த சைக்கிளின் உரிமையாளருக்கு ஒரு மன்னிப்புக் கடிதத்தையும் அவர் எழுதி வைத்துள்ளார்.

அதில், நான் ஏழைத் தொழிலாளி. உங்கள் சைக்கிளை எடுத்துச் செல்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள். பரேலி வரை சென்று சேர வேண்டும். என்னிடம் வேறு எந்த வசதியும் இல்லை. என்னுடைய மாற்றுத்திறனாளி குழந்தையை அழைத்துச் செல்வதற்காக உங்கள் சைக்கிளை எடுத்துக் கொள்கிறேன் என்று எழுதி வைத்துச் சென்றுள்ளார்.

சைக்கிள் காணாமல் போன நிலையில், வீட்டைப் பெருக்கும் போது, இந்த மன்னிப்புக் கடிதம் அந்த வீட்டின் உரிமையாளருக்குக் கிடைத்துள்ளது. இது இன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஏதுமற்ற நிலையில், வேறு வழியில்லாமல் சைக்கிளை எடுத்துச் சென்றாலும், அதற்காக மன்னிப்புக் கேட்டிருக்கும் ஒரு புலம்பெயர் தொழிலாளியின் நேர்மை பலருக்கும் பிடித்திருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.