மத்தியப் பிரதேசத்தில் டிரக் கவிழ்ந்து 5 புலம்பெயர் தொழிலாளர்கள் பலி
மகாராஷ்டிரத்தில் இருந்து உத்தரப்பிரதேசம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிரக் ஒன்று, மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் அருகே சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாகினர். 19 பேர் காயமடைந்தனர்.








