கரோனா: மகாராஷ்டிரம், மும்பை, தாராவி நிலவரம்
மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தகவல் வெளியாகியுள்ளது.


மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர், பலியானோர் உள்ளிட்ட தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரம்:
மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,347 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 63 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 33,053 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 600 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 7,688 பேர் குணமடைந்துள்ளனர்.
மும்பை:
மும்பையில் இன்று ஒரே நாளில் 1,571 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 38 பேர் பலியாகியுள்ளனர். அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 19,967 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,012 பேர் குணமடைந்துள்ளனர், 734 பேர் பலியாகியுள்ளனர்.
தாராவி:
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 44 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ளது. இதில் 56 பேர் பலியாகியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...