மகாராஷ்டிரத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
மகாராஷ்டிரத்தில் பொது ஊரடங்கு வருகிற மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.


மகாராஷ்டிரத்தில் வருகிற மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் இருந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அங்கு 30,706 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோரின் எண்ணிக்கை 1,135 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 7,088 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பில் மூன்றில் ஒரு பங்கு பாதிப்பு மகாராஷ்டிரத்தில் இருப்பதால் அங்கு மேலும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றுடன் (மே 17) மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மகாராஷ்டிரத்தில் இம்மாத இறுதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...