புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

உ.பி - ம.பி எல்லையில் தடுப்புகளைத் தகர்த்த புலம்பெயர் தொழிலாளர்கள்

​மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் உள்ள உத்தரப் பிரதேசம் - மத்தியப் பிரதேசம் எல்லையில் உத்தரப் பிரதேசம் செல்வதற்காக புலம்பெயர் தொழிலாளர்கள் காவல் துறையினரின் தடுப்புகளைத் தகர்த்தனர்.

News image
Updated On :17 மே 2020, 5:23 pm

DIN


மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா பகுதியில் உள்ள உத்தரப் பிரதேசம் - மத்தியப் பிரதேசம் எல்லையில் உத்தரப் பிரதேசம் செல்வதற்காக புலம்பெயர் தொழிலாளர்கள் காவல் துறையினரின் தடுப்புகளைத் தகர்த்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்துக்குச் செல்வதற்காக எண்ணற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் அந்த மாநில எல்லையில் கூடினர். இதனால், அங்கு காவல் துறையினர் தடுப்புகளை வைத்திருந்தனர். தங்களை மாநிலத்துக்குள் அனுமதிக்காததால், தடுப்புகளைத் தகர்த்ததாக புலம்பெயர் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.

இதுபற்றி தொழிலாளர் ஒருவர் தெரிவிக்கையில், "நாங்கள் நடந்தே வருகிறோம். காவல் துறையினர் நாங்கள் உத்தரப் பிரதேசத்துக்குச் செல்வதை அனுமதிக்க மறுக்கின்றனர். இங்கு உணவுக்கும், குடிநீருக்கும் எவ்வித ஏற்பாடுகளும் இல்லை" என்றார். மற்ற தொழிலாளர்களும் இதே கருத்தையே தெரிவித்தனர்.

முன்னதாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், மத்தியப் பிரதேச அரசு பேருந்து வசதியை ஏற்படுத்தியது. மகாராஷ்டிர எல்லையில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் எல்லையில் இறக்கிவிடுவதற்கு இந்த வசதியை ஏற்படுத்தியது மத்தியப் பிரதேச அரசு. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.