குவாலியரில் பெயிண்ட் கடையில் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பெயிண்ட் கடையில் ஏற்பட்ட  தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியாகினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பெயிண்ட் கடையில் ஏற்பட்ட  தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியாகினர்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ரோஷ்நிகார் பகுதியில் ஹரி ஓம் மங்கள் என்பவர் வசித்து வருகிறார். இரண்டு தளங்கள் உள்ள இவரது வீட்டின் தரைத்தளத்தில் பெயிண்ட் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. மேல்தளத்தில் அவர் குடும்பத்தோடு வசித்து வந்தார்.

இந்நிலையில் திங்கள் காலையன்று தரைத்தளத்தில் உள்ள பெயிண்ட் கடையில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்தத்தீயானது மளமளவென மேல்தளத்திற்கும் பரவியது. சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினர் மூன்று வாகனங்களில்       

விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலியாகினர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.  

ஆரம்பகட்ட விசாரணையில் தீ விபத்திற்கு மின் கசிவே காரணம் என்று தெரிய வந்திருப்பதாக காவல்துறையினர் தெரவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com