காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தில்லியில் மேலும் 5 சிஆர்பிஎஃப் காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று

தில்லியில் மேலும் 5 சிஆர்பிஎஃப் காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :22 மே 2020, 4:30 pm

DIN

தில்லியில் மேலும் 5 சிஆர்பிஎஃப் காவலர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4ஆவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி நாட்டில் கரோனா பாதிப்பு 1,18,447 ஆக உள்ளது. இவற்றில் 66,330 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை இந்த நோய்க்கு 3,583 பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 148 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தில்லியில் மேலும் 5 சிஆர்பிஎஃப் காவலர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி தில்லியில் 340 சிஆர்பிஎஃப் காவலர்கள் அந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 125 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

213 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர் என சிஆர்பிஎஃப் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.