மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

வங்கிக் கடன் தவணைகளை செலுத்த மேலும் 3 மாதங்களுக்கு சலுகை நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி

வங்கிக் கடன்களுக்கான தவணை செலுத்துவதற்கான சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

News image
Updated On :22 மே 2020, 5:05 am


வங்கிக் கடன்களுக்கான தவணை செலுத்துவதற்கான சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார்.

ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில், பல முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.

அதில், வீடு, வாகனம்ட உள்ளிட்ட கடன்களுக்கான மாத தவணையை செலுத்துவதற்கான சலுகை ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் என மேலும்ட 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

ஏற்கனவே மாா்ச், ஏப்ரல் மற்றும் மே என மூன்று மாதங்கள் சலுகை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த சலுகை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.