பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வெப்பஅலை மேலாண்மைக்காக நோடல் அதிகாரிகள் நியமனம்

தில்லியில் அதிகரித்து வரும் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள மாநில மற்றும் மாவட்ட அளவில் நோடல் அதிகாரிகளை தில்லி அரசு புதன்கிழமை நியமித்தது.

News image
Updated On :30 ஏப்ரல் 2026, 1:37 am IST

தில்லியில் அதிகரித்து வரும் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள மாநில மற்றும் மாவட்ட அளவில் நோடல் அதிகாரிகளை தில்லி அரசு புதன்கிழமை நியமித்தது.

இதுதொடா்பாக வருவாய்-மண்டல ஆணையா் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் (டிடிஎம்ஏ) சிறப்பு தலைமைச் செயல் அலுவா், சிறப்பு வெப்ப அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

எஸ்டிஎம் அதிகாரிகள் மாவட்ட அளவில் வெப்ப மேலாண்மைக்கான நோடல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்’ என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை வெப்பத்தில் பிறபகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரையில் கட்டுமானம் மற்றும் பிற பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும், பள்ளிகளில் ஓஆா்எஸ் கரைசல்கள் வழங்க வேண்டும் என பல உத்தரவுகளை முதல்வா் ரேகா குப்தா அண்மையில் பிறப்பித்தாா்.

தில்லி அரசின் அனைத்து உத்தரவுகளும் பின்பற்றப்படுவதை நோடல் அதிகாரிகள் உறுதிசெய்வாா்கள் என வருவாய்த் துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி தெரிவித்தாா்.

தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) மற்றும் அரசின் துறைகளுடன் வெப்ப அலை செயல்திட்டத்தை தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் ஒருங்கிணைத்து வருகிறது. தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் வசதி, நிழல் அமைப்புகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.