ஜம்மு காஷ்மீரில் கரோனா அதிகம் பரவும் அபாயம் உள்ள ஷோபியான் பகுதியில் இருந்து உரிமையாளரை சுமந்து வந்த குதிரையையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தியுள்ளது.
கரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் ஷோபியானில் இருந்து ரஜௌரி மாவட்டத்துக்கு முகல் சாலை வழியாக திங்கள்கிழமை குதிரையும் அதன் உரிமையாளரும் வந்து சேர்ந்தனர்.
இந்த நிலையில், குதிரையின் உரிமையாளர் தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைக்கப்பட்டு அவருக்கு கரோனா சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், அவரை சுமந்து வந்த குதிரையையும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி அதற்கு எந்த அறிகுறியும் இல்லை என்பதை உறுதி செய்தனர்.
ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மற்ற குதிரைகளுடன் விடாமல், அதனை 14 நாள்கள் தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. உரிமையாளருக்கு இன்னும் கரோனா பரிசோதனை முடிவுகள் வரவில்லை. ஒரு வேளை கரோனா இருந்தால், அதற்கேற்ப குதிரைக்கும் பராமரிப்பு நடவடிக்கை மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நியூ யார்க்கில் உள்ள வனவிலங்குகள் உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் புலிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தற்போது இந்தியாவில் குதிரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குப்பையில் கண்டெடுக்கப்பட் பழைமையான கல்வெட்டு

இன்றைய ராசி பலன்கள் (03.08.2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு பதவி உயர்வு!

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 03) - ! வெற்றி யாருக்கு?

வினாத்தாள் கசிவு வழக்குகள் தொடா்பான சிறப்பு நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்: தில்லி உயா்நீதிமன்றம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



