விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் மட்டும் 114 காவலர்களுக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் மட்டும் 114 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :30 மே 2020, 3:04 pm

DIN

மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் மட்டும் 114 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கரோனாவால் இதுவரை 1.74 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகிலேயே கரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா 9-ஆவது இடத்தில் உள்ளது. குறிப்பாக இந்தியாவை பொறுத்தவரை மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும் கரோனாவுக்கு இதுவரை 2 ஆயிரத்துக்கு அதிகமானோர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் 2816 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. 

இந்த நிலையில் மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் மட்டும் 114 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 1,330 காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.