மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கரோனா: ஆந்திரம், அசாம், உத்தரகண்ட், உ.பி நிலவரம்

ஆந்திரப் பிரதேசம், அசாம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
கோப்புப்படம்
Updated On :31 மே 2020, 10:34 am

DIN


ஆந்திரப் பிரதேசம், அசாம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திரப் பிரதேசம்:

ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 98 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 3,042 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 பேர் பலியானதைத் தொடர்ந்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

அசாம்:

அசாமில் இன்றைக்கு (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 56 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,272 ஆக உயர்ந்துள்ளது. இதில் 163 பேர் குணமடைந்துள்ளனர். 1,102 பேர் சிகிச்சையில் உள்ளனர், 4 பேர் பலியாகியுள்ளனர்.

உத்தரகண்ட்:

உத்தரகண்டில் இன்று புதிதாக 53 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 802 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரப் பிரதேசம்:

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 262 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 4,709 பேர் குணமடைந்துள்ளனர். 2,901 பேர் சிகிச்சையில் உள்ளனர். பலி எண்ணிக்கை 213 ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.