பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உ.பி.யிலிருந்து மாநிலங்களவைக்கு 10 பேர் போட்டியின்றித் தேர்வு

உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு 10 பேர் திங்கள்கிழமை போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :2 நவம்பர் 2020, 12:17 pm

DIN


உத்தரப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு 10 பேர் திங்கள்கிழமை போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர்.

இதில் பாஜகவிலிருந்து 8 பேர், சமாஜவாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளிலிருந்து தலா ஒருவர் தேர்வாகியுள்ளனர்.

பாஜகவிலிருந்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, அருண் சிங், ஹரித்வார் துபே, பிரிஜ் லால், நீரஜ் சேகர், கீதா சக்யா, சீமா திவிவேதி மற்றும் பி.எல். வர்மா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். சமாஜவாதியிலிருந்து ராம் கோபால், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து ராம்ஜி கௌதம் ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

இதில் 10-வது சீட்டுக்கு பகுஜன் சமாஜின் ராம்ஜி கௌதம் மற்றும் சுயேச்சை வேட்பாளர் பிரகாஷ் பஜாஜ் ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவியது. பிரகாஷ் பஜாஜுக்கு சமாஜவாதி ஆதரவு தெரிவித்தது. பஜாஜின் வேட்பு மனு ரத்து செய்யப்பட்டதையடுத்து, பிரச்னை முடிவுக்கு வந்தது. இதன்மூலம், கட்சியிலிருந்து 10 வாக்குகள் இருந்தபோதிலும் பகுஜன் சமாஜ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.