6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியால் ஜனநாயகத்திற்குத் தலைக்குனிவு'

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் ஜனநாயகத்திற்கு மீண்டும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

News image
உள்துறை அமைச்சர் அமித் ஷா (கோப்புப்படம்)
Updated On :4 நவம்பர் 2020, 6:41 am

DIN

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் ஜனநாயகத்திற்கு மீண்டும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

கட்டட உட்புற வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டியதாக ஊடகவியலாளரும், தனியார் தொலைகாட்சியின் ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமியை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.

கட்டட உற்புற வடிவமைப்பாளரை தற்கொலைக்குத் தூண்டியதாக கடந்த 2019-ஆம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த வழக்கை மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் மும்பை காவல்துறையினர் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதனால் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, '' காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணியும் ஜனநாயகத்தை மீண்டும் தலைகுனியச் செய்துள்ளனர். ரிபப்ளிக் தொலைக்காட்சி மற்றும் அதன் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக அரச அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது தனிநபர் சுதந்திரத்தின் மீதான தாக்குதல். ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது அவசரநிலையை நமக்கு நினைவூட்டுகிறது'' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.