எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் தேவேந்திர ஃபட்னவீஸ்

கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

News image

கோப்புப்படம்

Updated On :4 நவம்பர் 2020, 4:42 pm


கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த அக்டோபர் 25-ம் தேதி கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, தெற்கு மும்பையிலுள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.  

இந்த நிலையில் அவர் மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார். 

இதுபற்றி மருத்துவர் ஒருவர் தெரிவிக்கையில், "கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஃபட்னவீஸ் இன்று வீடு திரும்பினார். சில நாள்களுக்கு அவர் தனிமையில் இருப்பார்" என்றார்.

இதுபற்றி ஃபட்னவீஸ் மனைவி அம்ருதா சுட்டுரைப் பக்கத்தில் பதிவிடுகையில், அடுத்த 8 நாள்களுக்கு அவர் வீட்டில் தனிமையில் இருப்பார் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.