மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'பட்டாசுகளைத் தவிர்க்கவும்': முதல்வர் கேஜரிவால் வேண்டுகோள்

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News image
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)
Updated On :5 நவம்பர் 2020, 11:07 am

DIN

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்த்து இல்லங்களில் இருந்தவாறே தில்லியில் உள்ள 2 கோடி மக்களும் லட்சுமி பூஜை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் வரும் 14-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பட்டாசுகள் விற்பனை மற்றும் வெடிப்பதற்கு அசாம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தடை விதித்துள்ளன.

இதனிடையே தில்லியில் உள்ள மக்கள் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். 
இது தொடர்பாக அவர் பேசியதாவது, ''தில்லியில் காற்றின் தரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

மேலும், ''கடந்த ஆண்டு பட்டாசுகளைப் புறக்கணித்த மக்களின் முடிவு நல்ல பலனை அளித்ததாகவும், இந்த ஆண்டும் மக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்'' என்றும் கேட்டுக்கொண்டார். 

''தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் தில்லி அரசு மாற்று ஏற்பாட்டை செய்துள்ளது. பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து தில்லியில் உள்ள 2 கோடி மக்களும் வீடுகளில் இருந்தவாறே லட்சுமி பூஜை செய்ய வேண்டும். நானும் எனது அமைச்சர்களுடன் பூஜையில் பங்கேற்க உள்ளேன். இதனை ஒருசில தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசில் இந்த முடிவால் நகரம் முழுவதும் நேர்மறையான எண்ணம் உருவாகும்'' என்று அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.