பிகார்: காங். பேரணியில் பங்கேற்றுத் திரும்பிய மூவர் விபத்தில் பலி
பிகார் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் பங்கேற்றுத் திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி


பிகார் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் பங்கேற்றுத் திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். 21 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மூன்றாம் கட்ட பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. அதற்கான வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் பிகார் மாநிலம் அமோர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் அப்துல் ஜமீல் என்ற வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் சார்பில் பிரசாரப் பேரணி நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். இதனிடையே பேரணியில் பங்கேற்று காங்கிரஸ் தொண்டர்கள் வீடு திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நேற்று (வியாழக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் மூன்று காங்கிரஸ் தொண்டர்கள் உயிரிழந்தனர். விபத்தில் 21 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...