பிகார் 3-ம் கட்ட தேர்தல்: 6 மணி நிலவரப்படி 55.73 சதவிகிதம் வாக்குப்பதிவு
பிகார் பேரவைத் தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப்பதிவில் மாலை மணி நிலவரப்படி 55.73 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.


பிகார் பேரவைத் தேர்தலின் 3-ம் கட்ட வாக்குப்பதிவில் மாலை மணி நிலவரப்படி 55.73 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
மொத்தமுள்ள 243 பேரவைத் தொகுதிகளில், முதல் கட்டமாக 71 தொகுதிகளில் கடந்த மாதம் 28-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளில் கடந்த 3-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்நிலையில், மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டமாக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள 78 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதில், மாலை மணி நிலவரப்படி 55.73 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கிஷான்கஞ்ச் மாவட்டத்தில் 59.99 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சம் வைஷாலி 49.97 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு நடைபெறும் முதல் தோ்தல் என்பதால், பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...