மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

'காற்று மாசுபாட்டால் தில்லியில் கரோனா அதிகரிக்கவில்லை'

தில்லியில் காற்று மாசுபாட்டால் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கவில்லை என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

News image
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் (கோப்புப்படம்)
Updated On :7 நவம்பர் 2020, 11:29 am

DIN

தில்லியில் காற்று மாசுபாட்டால் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கவில்லை என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகள் அரசு மருத்துவமனையில் போதுமான அளவு இருப்பதாகவும் கூறினார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தில்லியில் மூன்றாவது முறையாக தொற்று பரவல் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் காற்று மாசுபாட்டால் தில்லியில் கரோனா தொற்று அதிகரிக்கவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் பேசியதாவது, ''மூன்றாவது முறையாக கரோனா தொற்று பரவி வருவதைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகளில் 110 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உள்பட 500 கரோனா படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் 80 சதவிகித படுக்கைகளை ஐ.சி.யூ படுக்கைகளாக ஒதுக்குவதற்கான ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் ஐ.சி.யூ. படுக்கைகள் போதிய அளவில் உள்ளன. எனினும் சிலர் அரசு மருத்துவமனையை புறக்கணித்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற விரும்புவதால் படுக்கைகளின் எண்ணிக்கையில் பிரச்னை ஏற்படுகிறது.

மேலும், காற்று மாசுபாட்டால் கரோனா தொற்று பரவவில்லை. தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதாலும், பண்டிகை காலத்தையொட்டி சந்தைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதாலும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.