மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் பனிமூட்டம் அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் அவதி

தில்லியில் கடந்த சில நாள்களாக காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், அதிகாலையில் ஏற்படும் பனிமூட்டம் காலை வரை நீடிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

News image
தில்லியில் பனிமூட்டம் அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் அவதி (கோப்புப்படம்)
Updated On :7 நவம்பர் 2020, 5:28 am

DIN

தில்லியில் கடந்த சில நாள்களாக காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், அதிகாலையில் ஏற்படும் பனிமூட்டம் காலை வரை நீடிப்பதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

நாட்டின் தலைநகரான தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தில்லி மாசுக்கட்டுப்பாட்டு குழு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தீபாவளிப் பண்டிகையையொட்டி சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஜனவரி மாதம் முதல் கடும் பனி மூட்டம் ஏற்படும் நிலையில், தற்போதே தில்லி நகரின் பெரும்பாலான பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது.

சனிக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட பனிமூட்டத்தில் கட்டடங்கள் தெரியாத அளவிற்கு அடர்த்தியான புகை சூழ்ந்திருந்ததால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.