மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லியில் விரைவில் கரோனா குறையும்: சுகாதாரத்துறை அமைச்சர்

தில்லியில் மூன்றாவது முறையாக கரோனா பரவி வரும் நிலையில், தொற்று பரவல் விரைவில் குறையும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

News image
தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் (கோப்புப்படம்)
Updated On :8 நவம்பர் 2020, 7:50 am

DIN

தில்லியில் மூன்றாவது முறையாக கரோனா பரவி வரும் நிலையில், தொற்று பரவல் விரைவில் குறையும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

தனியார் மருத்துவமனைகளில் 80 சதவிகிதம் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்ற மாநில அரசின் ஆணையை நிராகரித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார்.
 
தில்லியில் கடந்த சில நாள்களாக கட்டுக்குள் இருந்த கரோனா தொற்று மூன்றாவது முறையாகப் பரவத் தொடங்கியுள்ளது. 

இதனிடையே இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ''தில்லியில் மூன்றாவது முறையாக அதிகரித்து வரும் கரோனா தொற்று விரைவில் குறையும். அதற்கான முயற்சியாக அரசு சார்பில் பரிசோதனைகள் அதிகரிக்கப்படுகின்றன.

அரசு மருத்துவமனைகளில் போதிய அளவு கரோனா மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் உள்ளன. தளர்வுகள் மற்றும் பண்டிகை காலத்தையொட்டி சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகரிப்பதே தொற்று பரவக் காரணமாக உள்ளது. 

மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. கடைவீதிகளில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.