பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஜம்மு-காஷ்மீர்: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை; 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :8 நவம்பர் 2020, 11:13 am

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தின் மாச்சில் பகுதியில் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

எனினும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி, எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் உள்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இது குறித்து ஸ்ரீநகர் பாதுகாப்புப்படை செய்தித்தொடர்பாளர் ராஜேஷ் கலியா பேசியதாவது, ''நள்ளிரவு ஒருமணியளவில் எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் அத்துமீறி நுழைந்ததை  ரோந்துப் பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்புப்படை வீர்கள் கண்டனர். 

இதனையடுத்து அந்தப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எனினும் நமது ராணுவ வீரர்களையும் இதில் இழக்க நேர்ந்தது. 

இந்த நிலையில், எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளின் அத்துமீறல் மேலும் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் எல்லைப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் தொடர் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.