ஜம்மு காஷ்மீர் மாவட்ட கவுன்சில் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக
ஜம்மு காஷ்மீரில் நடைபெற உள்ள மாவட்ட மேம்பாட்டுக் கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.


ஜம்மு காஷ்மீரில் நடைபெற உள்ள மாவட்ட மேம்பாட்டுக் கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டுக் கவுன்சில் தேர்தல் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெற உள்ளது.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சி 72 இடங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி ஜம்மு பகுதிக்கு 35 வேட்பாளர்களும், காஷ்மீர் பகுதிக்கு 37 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டதற்குப் பின் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் தேர்தல் என்பதால் இது அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...