சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

அருணாசலில் 32 பாதுகாப்புப்படை வீரர்களுக்கு கரோனா

அருணாசலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 32 பாதுகாப்புப்படை வீரர்கள் உள்பட 97 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 நவம்பர் 2020, 5:49 am

அருணாசலில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 32 பாதுகாப்புப்படை வீரர்கள் உள்பட 97 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அருணாசலிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக அருணாசல் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 97 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த 20 பேருக்கும், அசாம் ரைபில் ஜவான்கள் இருவருக்கும், இரண்டு ராணுவத்தினருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பிகார் தேர்தலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு திரும்பிய இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த வீரர்களில் சிலருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

புதிதாக 85 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 14,051-ஆக அதிகரித்துள்ளது. 1,484 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.