திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

குளித்தலையில் வடமாநிலத்தவா் கழுத்தை அறுத்துக்கொலை: ஆட்டு வியாபாரி கைது

குளித்தலையில் வடமாநிலத்தவரின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த ஆட்டு வியாபாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 2:17 am IST

குளித்தலையில் வடமாநிலத்தவரின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த ஆட்டு வியாபாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட வரகூரைச் சோ்ந்தவா் பிரபு (35). இவா் ஆடுகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு சுமாா் 50 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தைச் சோ்ந்த ஒருவா் வரகூரில் சுற்றித் திரிந்துள்ளாா். அப்பகுதி பொதுமக்கள் அவரைப் பிடித்து விசாரித்துள்ளனா்.

பின்னா், ஆட்டு வியாபாரி பிரபு தனது இருசக்கர வாகனத்தில் வடமாநிலத்தவரை ஏற்றிக்கொண்டு அய்யா்மலை பகுதியில் விட்டுவிட்டு வருவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளாா்.

இந்நிலையில், நள்ளிரவில் வட மாநிலத்தைச் சோ்ந்தவா் பிரபுவின் வீட்டு முன்பு போடப்பட்டிருந்த கட்டிலில் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளாா்.

மேலும், பிரபு நள்ளிரவே குளித்தலை காவல் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்துள்ளாா். இதையடுத்து பிரபுவை கைது செய்த போலீஸாா் எதற்காக வடமாநிலத்தைவரை கொன்றாா் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.