குடும்ப அரசியல் கட்சிகள் ஜனநாயகத்தின் பெரிய அச்சுறுத்தல்: பிரதமர் மோடி
குடும்பங்கள் நடத்தும் அரசியல் கட்சிகள் இந்திய ஜனநாயகத்தின் பெரிய அச்சுறுத்தல் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) தெரிவித்தார்.


குடும்பங்கள் நடத்தும் அரசியல் கட்சிகள் இந்திய ஜனநாயகத்தின் பெரிய அச்சுறுத்தல் என பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) தெரிவித்தார்.
பிகார் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, தில்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பங்கேற்று பிரதமர் மோடி மேலும் பேசியதாவது:
"வளர்ச்சிக்காக நேர்மையாக உழைப்பவர்களுக்குதான் மக்கள் ஆதரவளிப்பார்கள் என்பதை பிகார் பேரவைத் தேர்தலும் மற்ற இடைத் தேர்தல்களும் தெளிவுபடுத்திவிட்டன. 21-ம் நூற்றாண்டில் வளர்ச்சியின் அடிப்படையில்தான் தேசிய அரசியல் என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர். கொலை ஆட்டம் ஜனநாயகத்தில் செல்லுபடியாகாது.
ஏழைகளும், தலித்துகளும் அவர்களது பிரதிநிதிகளைப் பார்க்கும் ஒரே தேசியக் கட்சி பாஜக. அனைத்து வகுப்பினர் மற்றும் பிராந்தியத்தையும் பாஜக மட்டும்தான் புரிந்துகொள்ளும். கரோனா பெருந்தொற்றை நாங்கள் கையாண்ட விதத்தை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்திவிட்டன."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...